சிலப்பதிகாரம்
கட்டுரை காதை
1:மதுராபதி
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உண்கண் தவளவாள் முகத்தி; கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி; இடைநிலை விரிந்த நித்தில நகைத்தி. இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பனித்துறைக் கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன், குலமுதற் கிழத்தி; ஆதலின்-அலமந்து, ஒருமுலை குறைத்த திருமா பத்தினி, அலமரு திருமுகத்து ஆயிழை நங்கை-தன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என
👍
ReplyDelete